இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாச...
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார்.
அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது.
2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தழுவலான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.