ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா (K.Inbarasa) தெரி...
ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு ரணில் அவர்களுக்கே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா (K.Inbarasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (24) புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) சந்தித்து இருந்தோம்.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதிவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை.
எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும் மற்றும் வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திக்க சொன்னார்கள்.
நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேசியிருந்தோம்.