இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிருகின்...
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர்.
தற்போது போட்டியாளர்கள்,தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சகிதியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளதுடன் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
புல்லு கொடுத்து வரவேற்பு
இந்நிலையில் சஜித் க்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்திற்கு வீதியோரத்தில் இருந்த சிலர் புல் கொடுப்பதைக் காட்டும் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவரும் SJB தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் தம்புத்தேகம பிரதேசத்தில் பேரணி நடைபெற்றது.
இது தொடர்பான படங்களில் சஜித் பிரேமதாசவின் படங்களுடன் கூடிய பேருந்து வருகைதரும்போது , வீதியோரத்தில் நின்ற இருவர், பேரணிக்கு வந்தவர்களுக்கு புல்லை நீட்டுவதைக் காணலாம்.