வடக்கு - கிழக்கிலே அதிகமான வாக்குகள் சஜித் பிரேம தாசவுக்கு காணப்பட்ட நிலையில், தற்போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுகின்றமையினால்...
வடக்கு - கிழக்கிலே அதிகமான வாக்குகள் சஜித் பிரேம தாசவுக்கு காணப்பட்ட நிலையில், தற்போது தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுகின்றமையினால் சஜித் பிரேம தாசவின் பெரும்பான்மையான வாக்குகள் தமிழ் பொது வேட்பாளர் பக்கம் இழக்கப்பட கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கையில் இருக்கும் பொருளாதார ஆய்வாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜித் பிரேம தாசவின் வெற்றி வாய்ப்பை கேள்வி குறியாக்க கூடியதாகவே தமிழ் பொது வேட்பாளர் எடுக்க கூடிய ஒவ்வொரு வாக்கும் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளரின் வாக்கு, சஜித் பிரேமதாச எடுக்க கூடிய வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.