பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையின் தலைவர் H.K.K.A.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாள் சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்படுவதுடன், அந்த சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் சேர்க்கப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபா வழங்கப்படவுள்ளது.