இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal T...
இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு காவல்துறையினர் மக்களை கோட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சி வெளிப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் குழுவாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி பதிவியேற்றுள்ள நிலையில் அரசியலிலும், அரசியல் பதவிகளும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையிலே அமைதியாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.