வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெர...
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு மாகாணம் முக்கிய கேந்திர நிலையமாக மாற்றப்படும்.
பல வருடங்களாக அரசியல் இலாபத்துக்காக வடக்கு மாகாணம் ஒடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் அதன் அபிவிருத்திக்குப் பங்களிக்க முடியும்.
யாழ்ப்பாண முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச விமான நிலையம் வர்த்தக மையமாக மாற்றப்படும்.
வடக்கில் உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் உள்ளூர் தயாரிப்புகள் உலக சந்தையில் ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறான செயற்பாடுகள்மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகமான தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.