“யுக்திய” நடவடிக்கைகளுக்காக விசேட கடமையாற்றிய பொலிசார் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொ...
“யுக்திய” நடவடிக்கைகளுக்காக விசேட கடமையாற்றிய பொலிசார் அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், யுக்திய பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியதால், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரிவுகளின் கடமைகள் தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.