இணுவில் மக்லியோட் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் சித்த ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப...
இணுவில் மக்லியோட் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் சித்த ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இணுவில் மக்லியோட் வைத்தியசாலையின் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் சிறுவர் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் பா.சயந்தனின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக மயக்க மருந்து உணர்வழியியல் வைத்திய நிபுணர் நா.தரணிதரன், உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.சுகுணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.