வரும் 21 ஆம் திதை இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பிரசாரப்பணிகள் நிவடையவுள்ளது. இந்நிலையில் ச...
வரும் 21 ஆம் திதை இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பிரசாரப்பணிகள் நிவடையவுள்ளது.
இந்நிலையில் சமூக ஊடகங்களின் நடத்தையை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விசேட வேலைத்திட்டம்
அமைதியான காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் பிரசாரம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஊடகங்களுக்கும் மௌன காலம் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, சமூக ஊடகங்களின் நடத்தையை கையாள்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
. மேலும் அரசியல் பிரசாரங்கள் தொடர்பில் விசேட ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உடனடி சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பல குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.