காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியான...
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 184 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,215 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி 1,360 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 2,855 முறைப்பாடுகளும் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.