எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 அஞ்சல் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 அஞ்சல் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
அத்துடன் அஞ்சல் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி அஞ்சலிடல் பணிகளுக்காகக் கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதன்படி, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.