இந்தியாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக டாடா குழும நிறுவனங்களுக...
இந்தியாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக டாடா குழும நிறுவனங்களுக்கு தலைமையேற்று வழிநடத்திய ரத்தன் டாடா, சர்வதேச அரங்கில் மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழிலதிபராக விளங்கினார்.
ரத்தன் டாடாவின் மரணத்தை தற்போதை டாடா & சன்ஸ் குழும தலைவரான என். சந்திரசேகரன் அறிக்கை வாயிலாக உறுதி செய்தார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.