ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள...
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முந்தைய விசாரணை அறிக்கைகளும் இதன்போது கவனத்தில் கொள்ளப்படும்.
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் முன்வைக்கும் நியாயப்படுத்தல் இனி செல்லுபடியாகாது.
எனவே, அவரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை கிடையாது.
அரசியலமைப்பு விலக்கு காரணமாக அவர் மீது முன்னதாக வழக்கு தொடரப்படவில்லை.
எனவே, தற்போது அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும் எனவும் அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.