எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக மாவட்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக மாவட்ட ரீதியாக செலவிடக் கூடிய தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.
2023 இலக்கம் 3 எனும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான செலவு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.