பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை சத...
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் வெளிப்படுத்த வேண்டும் என ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நான் மதுபானசாலையை எடுக்கவில்லை என்பதை கடந்த வாரம் ஊடக சந்திப்பில் சத்தியக் கடதாசியை காண்பித்து வெளிப்படுத்தியிருந்தேன். இதனை ஏனைய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கும் சவாலாக விடுத்திருந்தேன். ஆனால் இதுவரை எவரும் அந்த சவாலை ஏற்று சத்தியக் கடாதாசியை வெளியிடவில்லை.
நாங்கள் அரசியலுக்கு புதிதாகவே வந்தோம். நாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக பல விடயங்களை அறிந்து கொண்டுள்ளேன். அந்த வகையில் சுமந்திரன் முன்னுதாரணமாக நடக்க வேண்டும். சுமந்திரன் தான் மதுபான சாலை எடுக்கவில்லை என்பதை சத்திய கடாதாசி மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதேபோல அக்கட்சியில் போட்டியிடும் ஏனைய சக வேட்பாளர்களும் இதனை செய்ய வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன் - என்றார்