ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ம...
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் சுலக்சனை முதன்மை வேட்பாளராக கொண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிளங்கியுள்ளது.
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த், பிரான்சிஸ் கஜன் , றொபேர்ட் ஜெனி , கருப்பையா சேகர் , சபாரட்ணம் ரமேஷ் , சிற்றம்பலம் கிருபாகரன் , நியூட்டன் ரமேஷ் மற்றும் சோமசுந்தரம் ஜூட் கஜேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.