2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியீடு தொடர்பில் அரசாங்கம் அலட்சி...
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியீடு தொடர்பில் அரசாங்கம் அலட்சியமாக செயற்படுவதாக பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளமையானது, வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையில் சில விடயங்கள் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், அதனை வெளியிடுவதில் அரசாங்கம், பாராமுகமாக இருந்து வருகிறது என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்த அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாது போனால் அவற்றை தாம் வெளியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
எனினும், நினைத்த நேரத்தில் குறித்த அறிக்கைகளை விளையாட்டுத்தனமாக வெளியிடமுடியாது என்றும், உதய கம்மன்பில சவால் விடுத்தப்படி முடிந்தால் வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.