மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைக்கு அருகில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரவு நேரத்தில் சுழி...
மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைக்கு அருகில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரவு நேரத்தில் சுழியோடி கடலட்டை பிடித்த 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு கடந்த வேளையில் கடல் அட்டைகளை பிடிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் சுழியோடிய 5 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 1,055 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவிற்கு உட்பட்ட SLNS புஸ்ஸதேவ பிரிவினால், இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிடித்த 604 கடல் அட்டைகளுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் SLNS தேரபுத்த மேற்கொண்ட இதேபோன்ற நடவடிக்கையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 451 கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இந்த நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1,055 கடல் அட்டைகளுடன் 5 சந்தேகநநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 – 68 வயதுக்குட்பட்ட வங்காலை மற்றும் சிலாவத்துறையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடல் அட்டைகளுடன் சந்தேகநபர்கள் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகர் ஆகியோரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.