ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுக்கும் உடுப்பிட்டி இமயானன் இளைஞர் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்து...
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுக்கும் உடுப்பிட்டி இமயானன் இளைஞர் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்ம் சக வேட்பாளர் ஜெனி வினோத்தும் கலந்து கொண்டு இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்த கலந்துடையாடலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி இம்முறை மூக்கு கண்ணாடிச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.