நாளைய தினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி...
நாளைய தினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்றைய தினம் (12) காலை 08 மணிக்கு கள ஆய்வு செய்யப்பட்டது.
இக் கள ஆய்வில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி உள்புற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், வெளிப்புற சூழலில் வாகனப் போக்குவரத்தினை மட்டுப்படுத்தல் தொடர்பாகவும், யாழ் வேம்படி உயர்தரப் பாடசாலையில் தேர்தல் பணியாளர்கள் மற்றும் முகவர்களின் வாகனப் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, யாழ்ப்பாண உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யரூள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.