புதிய இணைப்பு இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (20) வரை விளக...
புதிய இணைப்பு
இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர், இன்று காலை தனது வழக்கறிஞர்களுடன் வந்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முதலாம் இணைப்பு
தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர் சற்று முன்னர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் முடிவு செய்தது.
அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.