வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழு – 02 இன் 10 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் இன்ற...
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழு – 02 இன் 10 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் இன்றைய தினம் திங்கட்கிழமை தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனால் திறந்து வைக்கப்பட்டது.
தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கில் சுயேச்சைக் குழு – 2 இல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனது வேட்பாளர்களை ஆதாரித்து , கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ள சுலக்சன் 10 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்தார்.