இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 12 ஆம் திகதி புத்தளம், அக்கரயணத்தீவு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு...
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 12 ஆம் திகதி புத்தளம், அக்கரயணத்தீவு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) கிலோகிராம் மற்றும் முந்நூறு (300) கிராம் பீடி இலைகள், அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, 2025 ஜூலை 12 ஆம் புத்தளம், அக்கரயணத்தீவு பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தப் பகுதிகளில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 சந்தேகத்திற்கிடமான பொதிகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) கிலோகிராம் மற்றும் முந்நூற்று முப்பது (300) கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

.jpg)

.jpg)


