யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி முதல்வர் கௌரவ இம்மானுவல் தயாளன் அவர்கள் யாழ்ப்பாணம் கேற்வே லயன்ஸ் கழகத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கட...
யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி முதல்வர் கௌரவ இம்மானுவல் தயாளன் அவர்கள் யாழ்ப்பாணம் கேற்வே லயன்ஸ் கழகத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த (12)இரண்டு புல் வெட்டும் இயந்திரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு வருகைதந்த லயன்ஸ் கழகத்தினர் யாழ்ப்பாணம் மாநகரசபை பிரதி முதல்வர் கௌரவ இ.தயாளன், மாநகர ஆணையாளர் ச.கிருஸ்ணேந்திரன் மற்றும் கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரிடம் மேற்படி புல் வெட்டும் இயந்திரங்களையும் கையளித்தனர். மேலும் இரு இயந்திரங்களை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் லயன்ஸ் கழகத்தினர் உறுதியளித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.
பிரதி முதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக புல் வெட்டும் இயந்திரங்களை கையளித்த கேற்வே லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கு யாழ்ப்பாணம் மாநகரசபை சார்பில் பிரதி முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




