யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் நேற்று (22) இரவு 10.00 மணியளவில் யாழ் இந்திய துணைத் தூதரகத்தி...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் நேற்று (22) இரவு 10.00 மணியளவில் யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கந்தர்மடம் பகுதியில் இருந்து யாழ் நகர பகுதிக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பயணித்த அதிகாரிகளும், மேற்படி காரில் பயணித்த சாரதியும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அவ்வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

.jpeg)

