யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிர...
யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் மற்றும் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா, இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாயை விட அதிகமான தெரு மதிப்புள்ள ஒரு தொகையை கடற்படையனர் 2025 ஆகஸ்ட் 04 அன்று கைப்பற்றினர்.
அதன்படி, யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்புக்கு அருகிலுள்ள பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் வைக்கப்பட்டிருந்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது,பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்று இரண்டு (102) கிலோகிராம் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

.jpg)

