பிரித்தானியாவில் வசிக்கும் குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் , யாழ் . சென்.ஜேம்ஸ் மகா வைத்தியாலயத்திற...
பிரித்தானியாவில் வசிக்கும் குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் , யாழ் . சென்.ஜேம்ஸ் மகா வைத்தியாலயத்திற்கு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர் ஆசிரியர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க , பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் , தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் , சாரணர்களுக்கான சீருடைகள் என்பவற்றை அன்பளிப்பு செய்ததுடன் , பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தும் விதமாக அவற்றை புனரமைப்பு செய்தல் , உள்ளிட்டவற்றுடன் மின் விசிறிகள் உள்ளிட்டவற்றையும் வழங்கி வைத்துள்ளனர்.



