முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று வெகு விமர்சையாக மதிய போசனத்துடன் இடம்பெற்றது. இந்நிகழ்வின் மதிய போ...
முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று வெகு விமர்சையாக மதிய போசனத்துடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் மதிய போசனத்துக்கான பங்களிப்பை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிற்றூழியர்களும் பரிசுப்பொருட்களுக்கான பங்களிப்பினை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தயாளந்தன் அவர்களும் சட்டத்தரணி V.S.S தனஞ்சயன் அவர்களும் மேற்க் கொண்டு இருந்தனர்.
தான் முல்லைத்தீவு அரச அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட வடக்கிற்கான பொருளாதார மையமாக மாங்குளம் விரைவில் வளர்ச்சி அடையும் எனவும் இச்சிறார்களுக்கான வாசல் கதவுகள் திறக்கும் எனவும் V.S.S தனஞ்சயன் அவர்கள் தனது கருத்தை முன்வைத்து இருந்தார்.


.jpeg)

