இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 294 ரூபாயாகும்.
சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது அதன்படி அதன் புதிய விலை 318 ரூபாயாகும்.
அதேவேளை ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 355 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 180 ரூபாயாகவும் மாற்றமின்றி அதே விலையில் காணப்படுகிறது.



