யாழ்ப்பாணம் புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி அரியநாயகன் புலம் வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு கொடி...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி அரியநாயகன் புலம் வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
09ஆம் திருவிழாவான தேர் திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று 11 மணிக்கு விநாயக பெருமான் தேரில் ஆரோகணிப்பர்
10ஆம் திருவிழாவான மறுநாள் தீர்த்த திருவிழா நடைபெறும். அன்றைய தினம் காலை 09 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , கழுதைப்பிட்டி துறைமுகத்தில் சமுத்திர தீர்த்தம் இடம்பெறும். மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் இனிதே நிறைவு பெறும்.



