உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் ...
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் (26) தங்கத்தின் விலை 12000/- ஆல் அதிகரித்துள்ளது.
செட்டியார் தெரு தங்க சந்தையின் தகவல்களுக்கு அமைய கடந்த வௌ்ளிக்கிழமை (23) 385,000/-ஆக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 397,000/- ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கடந்த வாரம் 356,000/- ஆக நிலவிய 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 362,200/- ஆக அதிகரித்துள்ளது.



