கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 63 இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் நாட்டின் அரச ஊடகமான ப்ரஸ...
கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 63 இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் நாட்டின் அரச ஊடகமான ப்ரஸ் டி.வி தெரிவித்துள்ளது.
லெபனான் பிராந்தியம் மற்றும் குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் ரொக்கெட் தாக்குதல்கள்,ட்ரோன் வீச்சுகள், பீரங்கி குண்டுவெடிப்பும் அடங்கும்.
இஸ்ரேலின் தாக்குதலினால் கடந்த இரண்டாம் திகதியிலிருந்து இதுவரையில் லெபனானில் 1,020 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 2,600 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



