புனிதபூழி மக்கள் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை ஆனந்தமூர்த்தி (ஜேம்சன்) தலை...
புனிதபூழி மக்கள் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை ஆனந்தமூர்த்தி (ஜேம்சன்) தலைமையில் இடம்பெற்ற கட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் உபதலைவர் தியாகராசா ஜெகதீஸ்வரன், செயலாளர் சசிகரன் மிதுலா, உப செயலாளர் அருளாணந்தம் மதிவன்னன், பொருளாளர் ஜெகநாதன் ரகுநாதன், கட்சியின் ஆலோசகர் கார்த்திகைசு யோகராசா, யாழ்.மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திருச்செல்வம் இரவீந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் பேபி வேலுப்பிள்ளை (தேசத்தாய்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் தொடக்கவுரை நிகழ்த்திய புனிதபூமி மக்கள் கட்சியின் தலைவர் ஜேம்சன் கூறுகையில், வடக்கு - கிழக்கு மக்களின் பொருளாதார மேம்பாட்டினை இலக்காக கொண்டு இந்த கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளோம்.
போருக்கு பிந்திய சூழலில் தமிழ் மக்கள் பொருளாதாரரீதியாக கையறுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபக்கம் சமூக சீர்கேடுகளும், போதைப்பொருள் கலாச்சாரம் மலிந்துள்ளது. இந்த நிலையில் இருந்து எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கான அரசியல் வெறுமையாக உள்ளது.
அந்த அரசியல் வெறுமையை நிவர்த்தி செய்வதுதான் நம் முதன்மையான அரசியல் இலக்காகும். அதற்காக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் நாம் பணியாற்றவுள்ளோம். எங்களின் இந்த பணிக்கு மக்களிடம் இருந்து ஆதரவு வழங்கப்படுகிறது.
30 வருடங்களாக தூய்மையான இலக்குடன் பயணித்த நாம் இனிமேலும் அந்த தூய்மையான பணியை மக்களுக்காக முன்கொண்டு செல்வோம் என்றார்.



