சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன...
சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது
இவ் நிகழ்வானது சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் சாதனை பெண்மணிகளை சிறப்பிக்கும் முகமாகவும் இடம்பெற்றது
நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் முரளிதரன், வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன். வத்திராயன் கிராம உத்தியோகத்தர் சிகரம் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் வடமாகாண சிகரம் அமைப்பாளர் உதரபாஸ்கரன் என பலரும் கலந்து கொண்டனர்



