மழையால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை கையாள வேண்டிய முறைமைகள் தொடர்பான புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஐ.பி.எல்...
மழையால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை கையாள வேண்டிய முறைமைகள் தொடர்பான புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஐ.பி.எல் போட்டிகள் தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படவுள்ளது.
ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அந்தநாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.
அந்த நேரத்திற்குள் முழு போட்டி நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர் போட்டி நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சி செய்யப்படும்.
அதுவும் சாத்தியமில்லையெனில், சுப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படலாம்.
ஆனால், 5 ஓவர்களுக்குக் கூட போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்த ஆட்டம் ரத்து செய்யப்படும்.
அப்போது இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.
இறுதிப்போட்டிக்கு மட்டும் மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மழையால் போட்டியை நடத்த முடியாவிட்டால், அடுத்த நாள் போட்டி நடைபெறும்.
அதிலும் போட்டி முழுவதும் இரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி செம்பியனாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



