ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. சண்டிகார் மைதானத்தில் நடைபெற்...
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
சண்டிகார் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது .
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சனும், கில்லும் களமிறங்கினர். சாய் சுதர்சன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லருடன் கில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
கில் 39 ரன்களும், பட்லர் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ் தன் பங்குக்கு 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாடியது .இந்த விருவிருப்பான போட்டியில் 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 165 ஒட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது பஞ்சாப் அணி



