இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிகளி...
இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களினாலும் பரீட்சை காலப்பகுதிகள் மாற்றமடைந்ததால் கடந்த காலங்களில் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.
மேலும் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 09ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.



