ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தத்தை மேலும் 5 வாரங்கள் அல்லது 45 நாட்கள் வரை நீடிப்பதற்கு இரு தரப்பையும் சம்மதிக்க வைப்பதில் பாகிஸ்தான் நம்பிக்...
ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தத்தை மேலும் 5 வாரங்கள் அல்லது 45 நாட்கள் வரை நீடிப்பதற்கு இரு தரப்பையும் சம்மதிக்க வைப்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது.
இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இரகசியமாகவும், பரஸ்பர நம்பிக்கையுடனும் முன்னெடுக்கப்படுவதே சிறந்தது என பாகிஸ்தான் கருதுகின்றது.
குறிப்பாக, பகிரங்கமாக மோதிக்கொள்ளும் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நம்பிக்கைப் பாலத்தை உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகின்றது.
பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என பாகிஸ்தான் தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்குள் இருக்கும் சில உள்நாட்டு எதிர்ப்பாளர்களும் இந்த சமரச முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக பாகிஸ்தான் சந்தேகிக்கின்றது .



