மாத்தறை - மிதிகம பகுதியில் நேற்று (18) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அப்பகுதியில் ப...
மாத்தறை - மிதிகம பகுதியில் நேற்று (18) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் மட்டுமின்றி, குறித்த வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கவும் அந்த நபர்கள் முயற்சித்துள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டினால் வீட்டின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை வெளிநாட்டில் தங்கியிருப்பதாகக் கருதப்படும் பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'மிதிகம லங்சி' என்பவரே பின்னணியில் இருந்து வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.



