இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ள இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என அ...
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ள இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடும் 15 வயது மதிக்கத்தக்க வைபவ் சூரியவன்ஷி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 14 பந்துகளில் 39 ஓட்டங்களைக் குவித்தார்.
குறிப்பாக, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் அவர் பெற்ற இரண்டு ஆறு ஓட்டங்களும் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து தனது யூடியூப் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், 'வைபவ் சூரியவன்ஷி ஒரு விதியின் குழந்தை என வர்ணித்துள்ளார்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 15 வயதில் இவ்வாறானதொரு ஆட்டத்தை எவரும் வெளிப்படுத்தி நான் பார்த்ததில்லை'
மேலும், கடந்த ஆண்டு பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த வைபவ், இந்த ஆண்டு அவருக்காகக் காத்திருந்து, அவரது முதல் பந்திலேயே ஆறு ஓட்டத்தை பெற்றுள்ளார்.
பும்ரா போன்ற ஒரு ஜாம்பவான் பந்துவீச்சாளரையே தனது திட்டங்களை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு இந்தச் சிறுவன் நெருக்கடி கொடுத்துள்ளான்.
இது பந்துவீச்சாளர்களுக்கு ஒரு அச்சமூட்டும் விடயமாகும் என பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.



