சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சின்மயா அமிர்த யாத்திரை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. சின்மயா மிஷினின் இளைஞன் அமைப்ப...
சின்மயா மிஷனின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சின்மயா அமிர்த யாத்திரை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
சின்மயா மிஷினின் இளைஞன் அமைப்பான யோகேந்திராவினால் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆரம்பித்து 35 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்து நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் ஊடாக 2026-ஆம் ஆண்டு ஒக்டோபர் புதுடெல்லியில் நிறைவு பெறுகிறது.
ஊடக சந்திப்பில் சென்னை சின்மயா மிஷன் பொறுப்பாளர் சுவாமி மித்ரானந்தா, கொழும்பு சின்மயா மிஷன் பொறுப்பாளர் சுவாமி குணாதித்தானந்தா, சுவாமி அனுகூலானந்தா ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
ஊடக சந்திப்பில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவிக்கையில், பத்து இலட்சம் இளைஞர்களை சந்தித்து அந்த இளைஞர்களிடம் உள்ள திறமையை ஊக்குவித்து சிறந்த வாழ்க்கை வாழ்வதற்காக இந்த அமிர்த யாத்திரையை நாம் மேற்கொண்டுள்ளோம்.
சாதாரண வாழ்க்கையை வாழாமல் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்காக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்காகவே நாம் இந்த யாத்திரையும் மேற்கொண்டுள்ளோம். சுவாமி சின்மயானந்தரின் செயல்களும் பணிகளும் எல்லாரையும் ஊக்குவிக்க கூடிய விஷயங்களே. அந்த விடயங்களை எல்லோருக்கும் தெரிவிப்பதற்காக இந்த யாத்திரையை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். யாத்திரையில் 120 நாட்கள் தற்போது முடிந்து விட்டது.
இளைஞர்களை சந்திக்கும் விதமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினோம்.
அமிர்த யாத்திரையில் சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும்படியும், சுவாமி உபயோகப்படுத்திய பொருட்களை கண்காட்சியாக எடுத்து கொண்டு வருகிறோம்.
அதனுடன் சேவை செய்வதற்காக மூன்று வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். அதில் இளைஞர்களையே ஈடுபடுத்தி வருகிறோம். அதில் ஒரு காரை முழுவதுமாக பெண்களே இயக்குகிறார்கள். 35,000 கிலோ மீட்டரையும் அந்த பெண்கள் தான் செலுத்தி வருகிறார்கள்.
பெண்கள் என்ன செய்ய முடியும் என்று சந்தேகங்கள் எழும்போது பெண்களின் வலிமையும் பெண்களின் சக்தியும் வெளிக்காட்டும்படியும் ஊக்குவிக்கும் படி இந்த செயல்பாடு நடைபெறுகிறது - என்றனர்.



