குடந்த 04ம் திகதி மீசாலை மாவடி பிள்ளையார் கோயிலட பகுதியில் இடம்பெற்ற பாரதூரமான வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரினால் தேடப்பட்...
குடந்த 04ம் திகதி மீசாலை மாவடி பிள்ளையார் கோயிலட பகுதியில் இடம்பெற்ற பாரதூரமான வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த அஜித் குழுவினை வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று(07) சுழிபுரம் கல்விளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான அறுவரும் மிருசுவில் பகுதியினை சேர்ந்தவர்கள் என வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். மேலும் வெட்டியதற்கு பயண்படுத்திய வாள்கள் இரண்டும் அவர்கள் ஓட்டுவதற்கு பயண்படுத்தும் 2 மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் இதன் போது கைபெற்றப்பட்டுள்ளது. கடந்த 04ம் திகதி மீசாலை கிழக்கு மீசாலை பகுதியினை சேர்ந்த செல்வராசா கஜவதனன் வயது(20) என்ற இளஞன் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் சாவகச்சேரி பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றையதினம்(07) சுழிபுரம் கல்விளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இளஞர்கள் சிலர் தங்கி நிற்கின்றமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய புலணாய்வு பொலிஸாருக்கு பிரதேச மக்கள் தகவல் வழங்கியிருந்தனர். இதன் அடிப்படையில் இவர்களை விசாரணை செய்த போது மீசாலை மாவடி பிள்ளையார் கோயில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.