நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி முன் முச்சக்கர வண்டியும், ஹயஸ் வாகனமும் நேருக்கு நோர் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில்...
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி முன் முச்சக்கர வண்டியும், ஹயஸ் வாகனமும் நேருக்கு நோர் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 வயது சிறுமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் இருவர் பலத்த காயங்களுக்க உள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் கோப்பாய் பொலிஸால் ஹயஸ் வாகனத்தின் சாரதியை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.