எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (...
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (17.01.2018) புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
நாளை மறுதினம் முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழர் சமஉரிமை இயக்கம்இ நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை எனும் கூட்டினை அமைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.