புதிய ஆண்டு முதலாம் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் துண...
புதிய ஆண்டு முதலாம் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் துண்டி சந்திப் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் அதே பகுதிகளை சேர்ந்த 23 வயதான ஜோசப் அல்பிரட் ரவிராஜ் மற்றும் 33 வயதான ஆனந்தராஜா க்ரைன்சன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
இன்று மாலை குறித்த இருவரும் மணியம் தோட்டம் பகுதியில் வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணதித்துக்கொண்டிருந்த போது துண்டி சந்திக்கு அண்மையில் வீதியில் காணப்பட்ட பம்மிங் கில் வேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகட்டுப்பாட்டை இழந்து இருவரையும் தூக்கி வீசியுள்ளது.
இதனால் அருகில் இருந்த கம்பம் ஒன்றுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 நிமிடங்களிலும் மற்றைய நபர் சுமார் 30 நிமிடங்களின் பின்னரும் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.