உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழ...
உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் முக்கிய காரணமாக இருந்தது.
முதல் சீசன் பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தாலும் வெற்றி கரமாக 100 நாட்களை நிறைவு செய்தது. இதனையடுத்து தற்போது வரும் ஜூன் மாதம் முதல் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இரண்டாவது சீசனை உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பதிலாக முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் அரவிந் சாமி இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீசன்-2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் அதிகமாகி உள்ளது.