ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது. கடந்த 2015...
ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுவனின் தந்தை வடக்கு மொராக்கோவில் அமைந்துள்ள ஸ்பெயினுக்கு சொந்தமான பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த பகுதியில் இருந்தே பெரும்பாலான ஆப்பிரிக்க நாட்டு அகதிகள் ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சி மேள்கொள்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் மொராக்கோ நாட்டு பெண்மணி ஒருவர் கனமான பெட்டி ஒன்றை இழுத்துக் கொண்டு எல்லைப்பகுதி வழியாக செல்வதை ஸ்பெயின் பொலிசார் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் சந்தேகமடைந்த பொலிசார் எக்ஸ்ரே கருவிகள் மூலம் பெட்டியை சோதனையிட்டதில் சிறுவன் ஒருவன் பெட்டிக்குள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த சிறுவனை விடுவித்த பொலிசார், எல்லையில் சிறுவனுக்காக காத்திருந்த அவனது தந்தையை கைது செய்தனர்.
சிறுவனின் தந்தையான Ouattara(45), தம்மை ஆட்கடத்தும் நபர்கள் ஏமாற்றியதாகவும், தமது மகனை பத்திரமாக மாட்ரிட் நகருக்கு அழைத்துச் செல்வதாக கூறி தம்மிடம் இருந்து 5,000 யூரோ கைப்பற்றியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்தார்.
Ouattara கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஸ்பெயி
னில் குடியேறியவர். பின்னர் தனக்கான ஒரு வேலையை சம்பாதித்தவர், தமது மனைவி மற்றும் மகளை சட்டவிரோதமாகவே தன்னோடு அழைத்துக் கொண்டார்.
ஆனால் தமது மகனை தன்னுடன் அழைத்துக் கொள்ள 4 முறை முயற்சித்தும், ஸ்பெயின் அதிகாரிகளால் மறுக்கப்பட்டது.
தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் Ouattara, தாம் ஆட்கடத்தும் குற்றம் ஏதும் செய்யவில்லை எனவும், மனிதாபிமான ரீதியில் நீதிமன்றம் இந்த வழக்கை அணுகினால் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.