சுவிஸில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பேர்ன் மருத்துவமனையில் கடந்த 22-ஆம் திகதி...
சுவிஸில்
8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
பேர்ன் மருத்துவமனையில் கடந்த 22-ஆம் திகதி வியாழனன்று இரவு 8 வயது சிறுமி ஒருவர் சிகைச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், யாரோ சிலர் சிறுமியை துன்புறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதித்த சிறுது நேரத்தில் சிறுமியின் உயிர் பிரிந்ததையொட்டி தீவிர விசாரணையில் பொலிசார் இறங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இரண்டு நபர்களை கைது செய்துள்ள பொலிசார், அவர்கள் குறித்த தகவலை வெளியிட மறுத்துள்ளனர்.
மேலும், சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் சிறுமியின் பெற்றோர்களா இருக்கலாம் அல்லது வேறு நபர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்ககூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.