நடைபெற உள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
நடைபெற உள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் நடந்த தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் இந்த தொடரில் விளையாடமாட்டார் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் சுதந்திர கிண்ண தொடர் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.